நாமக்கல்லில் குறைதீர்க்கும் கூட்டத்தில் 371 மனுக்கள் பெறப்பட்டன
நாமக்கல்லில் குறைதீர்க்கும் கூட்டத்தில் 371 மனுக்கள் பெறப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் மொத்தம் 371 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகா ராணி மற்றும் தாசில்தார்கள், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story