கடத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 8 வயது சிறுவன் சாவு


கடத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 8 வயது சிறுவன் சாவு
x
தினத்தந்தி 9 May 2022 11:35 PM IST (Updated: 9 May 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

கடத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 8 வயது சிறுவன் இறந்தான்.

மொரப்பூர்:
பாலக்கோடு அருகே உள்ள கொம்மநாய்க்கன்அள்ளியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் லக்‌ஷன் (வயது 8). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டியில் உள்ள தனது அக்காள் சின்னபாப்பா வீட்டுக்கு வந்தான். சிறுவன் தனது அக்காவின் குழந்தைகளுடன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குளித்து கொண்டு இருந்தான். அப்போது சிறுவன் லக்‌ஷன் திடீரென தண்ணீரில் மூழ்கி உள்ளான். இதனால் அக்காள் குழந்தைகள் கூச்சல் போட்டனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து சிறுவனை மீட்டு பொம்மிடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story