ஒகேனக்கல் வனப்பகுதியில் உணவு, தண்ணீர் தேடி சுற்றித்திரியும் காட்டுயானை
உணவு, தண்ணீர் தேடி ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
பென்னாகரம்:
உணவு, தண்ணீர் தேடி ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
யானைகள் அட்டகாசம்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக- கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்குள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு தண்ணீர் தேடி தமிழக எல்லையான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன. இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் பீதி
இந்த யானை கூட்டங்களில் இருந்து பிரிந்த 10-க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதியில் நுழைந்தன. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அமைந்துள்ள முண்டச்சிப்பள்ளம் பகுதியில் காட்டு யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றித் திரிகின்றது. இந்த யானை சாலை ஓரங்களில் உள்ள மரக்கிளைகளை உடைத்தும், இலைகளை தின்றும் வருகின்றது. காலை, மாலை நேரங்களில் ஒகேனக்கல்-பென்னாகரம் சாலையை இந்த காட்டுயானை கடந்து செல்கின்றது. இதனால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story