இண்டூர் அருகே நாகாவதி அணையில் மூழ்கி கட்டிட மேஸ்திரி சாவு


இண்டூர் அருகே நாகாவதி அணையில் மூழ்கி கட்டிட மேஸ்திரி சாவு
x
தினத்தந்தி 9 May 2022 11:36 PM IST (Updated: 9 May 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

இண்டூர் அருகே நாகாவதி அணையில் மூழ்கி கட்டிட மேஸ்திரி இறந்தார்.

பாப்பாரப்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் சின்ன நடுப்பட்டியை சேர்ந்தவர் தனசேகர். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 28). கட்டிட மேஸ்திரி. இவர் தனது தம்பி விஜயகுமார் மற்றும் நண்பர்கள் 3 பேருடன் இண்டூர் அருகே நாகாவதி அணைக்கு நேற்று முன்தினம் குளிக்க வந்தார்.  அணையில் குளித்த போது வெங்கடேஷ் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி விஜயகுமார் மற்றும் நண்பர்கள் வெங்கடேசை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்சு பணியாளர்கள் பரிசோதித்தபோது வெங்கடேஷ் இறந்து விட்டது தெரியவந்தது. நாகாவதி அணையில் மூழ்கி கட்டிட மேஸ்திரி இறந்தது தொடர்பாக இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story