பீடிக்கடையை பெண்கள் முற்றுகை


பீடிக்கடையை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 May 2022 11:38 PM IST (Updated: 9 May 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.

கடையம்:
கடையம் அருகே மேட்டூாில் பீடி சுற்றும் தொழில் பிரதான தொழிலாகும். இந்த நிலையில் இங்குள்ள ஒரு தனியார் பீடிக்கடையில் கடந்த இரண்டு வருடங்களாக போனஸ் வழங்கவில்லை என்றும், வாரந்தோறும் பீடி சுற்றும் சம்பளத்தை சரியாக வழங்கவில்லை, நல்ல பீடி இலைத்தூள் தருவதில்லை. அதனால் பீடி சுற்றும் தொழில் பாதித்து முடங்குகிறது எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று பீடிக்கடையை முற்றுகையிட்டனர். 
தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைவில் பீடி சம்பளம் வழங்க கடைக்காரர்கள் உறுதி அளித்ததன் பேரில் பீடி சுற்றும் பெண்கள் கலைந்து சென்றனர்.

Next Story