நீர்மங்கலம் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?


நீர்மங்கலம் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?
x
தினத்தந்தி 9 May 2022 11:42 PM IST (Updated: 9 May 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே நீர்மங்கலம் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா்.

கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே நீர்மங்கலம் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா்.
வடிகால் வாய்க்கால்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, நீர்மங்கலத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வடிகால் வாய்க்கால் மதகு உள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் மூலம் நீர்மங்கலம், பூதமங்கலம், வக்ராநல்லூர், கோட்டகம், மேலக்கண்ணுச்சாங்குடி, புதுக்குடி, ஆய்குடி, சேகரை, பொதக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள 350 ஏக்கர் விளை நிலங்களில் மழை காலங்களிலும், ஆற்றில் அதிகமாக தண்ணீர் வரும் காலங்களிலும் வயல்களில் அளவுக்கு அதிகமாக தேங்கி நிற்கும் தண்ணீரை வெள்ளையாற்றில் வெளியேற்றி வருகின்றனர். 
பயிர்கள் அழுகி நாசம்
கடந்த 20ஆண்டுகளாக வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் 
அளவுக்கு அதிகமாக வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அப்பகுதி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் மழை மற்றும் இடர்பாடு காலங்களில் வயல்களில் அதிக அளவில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பயிர்கள் அழுகி சேதம் அடைகிறது. 
தூர்வார கோரிக்கை 
நீர்மங்கலம் வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நீர்மங்கலம் வடிகால் வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story