குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்


குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்
x
தினத்தந்தி 10 May 2022 12:01 AM IST (Updated: 10 May 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் பெற்றனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சப்-ஜூனியர் பிரிவில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடைபெற்ற போட்டி நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நரிக்குறவ மாணவ-மாணவிகள் குத்து சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் தொடர்ந்து சாதிக்க வேண்டும். நரிக்குறவர்கள் குறி பார்த்து சுடுவதில் திறமை படைத்தவர்கள் என்பதால் அவர்களது குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது’’ என்றார்.

Next Story