புதிய டி.வி. வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


புதிய டி.வி. வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 May 2022 12:20 AM IST (Updated: 10 May 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

புதிய டி.வி. வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

திருவாரூர்;
வாங்கிய 2 நாளில் பழுதடைந்த டி.வி.க்கு மாற்றாக புதிய டி.வி.யை பெண்ணுக்கு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு சமரச முறையில் தீர்ப்பு வழங்கியது.
பழுதடைந்த டி.வி.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி பகுதியை சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவர் கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு நாளில் ரூ.51 ஆயிரம் மதிப்புடைய ஒரு நிறுவன டி.வி.யை மன்னார்குடியில் செயல்படும் ஒரு பர்னிச்சர் நிறுவனத்தில் வாங்கினார்.
வாங்கிய 2 நாட்களில்  டி.வி பழுதடைந்துவிட்டது.  இதுகுறித்து அன்னலட்சுமி திருவாரூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பினரையும் நேரடியாக அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். 
புதிய டி.வி. வழங்க உத்தரவு
இதைத்தொடா்ந்து அன்னலட்சுமிக்கு சம்பந்தப்பட்ட பர்னிச்சர் நிறுவனம் புதிய டி.வி. வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன்அடிப்படையில்  அந்த பெண்ணுக்கு ரூ.51 ஆயிரம் மதிப்புள்ள புதிய டி.வி.யை பர்னிச்சர் நிறுவனம் வழங்கியது.

Next Story