பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 1:13 AM IST (Updated: 10 May 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பாளையங்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அமைப்பாளர் வீரராஜ் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். இணை அமைப்பாளர் சங்கரவடிவு, துணை அமைப்பாளர்கள் சுடலைமுத்து, காசியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்‌.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ படி வழங்க வேண்டும். பணமில்லாத மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஓய்வு கால பலன்களை ஓய்வு பெறும் அன்றே உடனடியாக வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Next Story