குற்றப்பத்திரிகை தாக்கலின் போது ஒரு சிறுவனை விடுவிக்க முடிவா?
விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலின் போது ஒரு சிறுவனை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர்,
விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஏற்கனவே 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 4 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் விருதுநகர் குழந்தைகள் குற்றவியல் விசாரணைக் குழுவினரால் விடுவிக்கப்பட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவ்வழக்கில் 680 பக்கமுள்ள குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட 4 சிறுவர்களில் 15 வயது சிறுவன் ஒருவனை வழக்கிலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது தான் இதுகுறித்து உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்ததற்கு வேறு காரணம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story