மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு; நண்பர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு; நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 10 May 2022 1:30 AM IST (Updated: 10 May 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்.

நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர முத்துகுமார். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 17). இவர் பாலிடெக்னிக் படித்தபோது பாதியில் நின்று விட்டார். இந்த நிலையில் மணிகண்டன், தனது நண்பர் மனகாவலன் பிள்ளைநகர் பகுதியை சேர்ந்த இனியன் (18) என்பவருடன் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் கீழ நத்தம் பகுதியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் குளித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார்.
கீழநத்தம் விலக்கு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், இனியனை நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இனியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story