தஞ்சையில் 15 இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் 15 இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 1:39 AM IST (Updated: 10 May 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தஞ்சையில் 15 இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தஞ்சையில் 15 இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்  நடந்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் பல்ேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாநகரில் மட்டும் 15 இடங்களில் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சை வணிக வரித்துறை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அஜய்ராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் கோதண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
பழைய ஓய்வூதிய திட்டம்
சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழைய ஓய்வூதியம் சாத்தியமில்லை என்று பேசியதை கண்டித்தும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் கால வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் வட்ட துணைத்தலைவர் குமரவேல் நன்றி கூறினார்.
தஞ்சை கோர்ட்டு சாலையில் உள்ள தாலுகா அலுவலகம், பனகல் கட்டிடம், மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கூட்டுறவு காலனி, கலெக்டர் அலுவலகம் உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story