வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 May 2022 1:49 AM IST (Updated: 10 May 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.

கொள்ளிடம் டோல்கேட், மே.10-
வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.
கார்மோதி பலி
திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் பொன்னி (வயது 80), இவர் நேற்று மாருதிநகர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது சென்னை நோக்கி சென்ற கார் பொன்னி மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
கறிக்கடை ஊழியர்
திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் மணிகண்டன் (27). இவர் கருமண்டபம் பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் திருச்சி வரகனேரியில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் சுப்பிரமணியபுரத்துக்கு வந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு சர்வீஸ் சாலையில் இருந்து வந்த போது, அந்த வழியாக வந்த வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதி்ல் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று மாலை இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன் மீது மோதிவிட்டு சென்ற வாகனம் எது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story