முதியவர் விஷம் குடித்து தற்கொலை
ஆரல்வாய்மொழி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
ஆரல்வாய்மொழி அருகே அனந்த பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 70), விவசாயி. இவருடைய மனைவி சுசீலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.
பால்பாண்டி கடந்த சில வருடங்களாக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் பால்பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பால்பாண்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் ஜெயக்குமார் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் பயிற்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story