வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்கள்


வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்கள்
x
தினத்தந்தி 10 May 2022 3:03 AM IST (Updated: 10 May 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்கள் இன்று நடக்கிறது.

அரியலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) 38 கிராமங்களில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் அரியலூர் வட்டாரத்தில் வாலாஜா நகரம், ரெட்டிப்பாளையம், கடுகூர், ஆலந்துறையார்கட்டளை, எருதுகாரன்பட்டி, காவனூர், நாகமங்கலம், புங்கங்குழி ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டாரத்தில் மணப்பத்தூர், தளவாய், ஆலத்தியூர், அசவீரன்குடிகாடு, மணக்குடையான் ஆகிய கிராமங்களிலும் நடக்கிறது. திருமானூர் வட்டாரத்தில் அழகியமணவாளன், ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, சின்னப்பட்டாக்காடு, கண்டிராதீர்த்தம், பூண்டு ஆகிய கிராமங்களிலும், ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் தழுதாலைமேடு, குந்தவெளி, முத்துசேர்வாமடம், கங்கை கொண்ட சோழபுரம், காட்டகரம், தத்தனூர், இறவாங்குடி ஆகிய கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. ஆண்டிமடம் வட்டாரத்தில் கூவத்தூர், அழகாபுரம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம், விளந்தை, இலையூர், சிலம்பூர் ஆகிய கிராமங்களிலும், தா.பழூர் வட்டாரத்தில் அம்பாப்பூர், சிந்தாமணி, தா.பழூர், வேம்புகுடி, பருக்கல், ஆகிய கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இ்ந்த முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிர்க்கடன் மற்றும் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல் மற்றும் அனுமதி வழங்குதல், பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்த பணிகள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story