ஆங்கில தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்


ஆங்கில தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 9 May 2022 9:37 PM GMT (Updated: 2022-05-10T03:07:32+05:30)

பிளஸ்-2 ஆங்கில தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்.

பெரம்பலூர்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கியது. நேற்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில தேர்வு நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் 7,920 மாணவ, மாணவிகள் ஆங்கில தேர்வினை எழுத தகுதி பெற்றிருந்தனர். ஆனால் தலா 93 மாணவர்கள், மாணவிகள் என மொத்தம் 186 பேர் தேர்வு எழுத வரவில்லை. சுமார் 7,700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆங்கில தேர்வை எழுதியுள்ளனர். இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் யாரும் காப்பி அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் மொழிப்பாட தேர்வில் ஏதேனும் ஒன்றை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழ் பாட தேர்வை எழுதியவர்களுக்கு ஆங்கில தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 13 பேர் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. தேர்வு முடிவின்போது அவர்கள் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Next Story