நடிகை சஞ்சனாவுக்கு வளைகாப்பு


நடிகை சஞ்சனாவுக்கு  வளைகாப்பு
x
தினத்தந்தி 9 May 2022 9:54 PM GMT (Updated: 2022-05-10T03:24:41+05:30)

நடிகை சஞ்சனாவுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது.

பெங்களூரு: 

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இவர் நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். சஞ்சனாவுக்கும் டாக்டர் அசீஷ் பாஷாவுக்கும் திருமணம் ஆனது. தற்போது சஞ்சனா 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதையொட்டி அவருக்கு வளைகாப்பு வைபவ நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்துள்ளது. முஸ்லிம் முறைப்படி சஞ்சனாவுக்கு சீமந்தம் நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில் சஞ்சனா தலை நிறைய பூக்களும், கழுத்தில் மலர் வடிவிலான பெரிய நெக்லஸ்சும் அணிந்துள்ளார். வெள்ளை நிற புடவை  அணிந்திருந்தார். இன்னும் 20 நாட்களில் சஞ்சனாவுக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story