கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்காமல் பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் ரூ.1 கோடி கொடுத்தால் ரூ.3 கோடி செலவில் தூர்வார வேண்டும்; சென்னிமலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்காமல் பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் ரூ.1 கோடி கொடுத்தால் ரூ.3 கோடி செலவில் தூர்வார வேண்டும்; சென்னிமலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 10 May 2022 4:26 AM IST (Updated: 10 May 2022 4:26 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்காமல் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் ரூ.1 கோடி கொடுத்தால் ரூ.3 கோடி செலவில் தூர்வார வேண்டும் என அரசை வலியுறுத்தி சென்னிமலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னிமலை
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்காமல் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் ரூ.1 கோடி கொடுத்தால் ரூ.3 கோடி செலவில் தூர்வார வேண்டும் என அரசை வலியுறுத்தி சென்னிமலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
சென்னிமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் மு.ரவி தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வது.
 இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரி அறிக்கை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, 
ரூ.3 கோடி செலவில்...
பாசன திட்டத்தில் இருந்த தண்டத்தீர்வை வரியை முந்தைய தி.மு.க. (கருணாநிதி) அரசு ரத்து செய்தது போல், விவசாயம், குடிநீர் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் அரசு ரத்து செய்ய வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கைவிடப்பட்ட திட்டத்தை மீண்டும் கொண்டு வந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.
 கடந்த 65 ஆண்டுகளாக கீழ்பவானி கால்வாய் தூர் வாரப்படவில்லை. அதனால் கடைமடை பகுதி விவசாயிகளுக்கு சமமான தண்ணீர் கிடைக்க நமக்கு நாமே திட்டத்தின் மூலம் கால்வாயை தூர்வார வேண்டும். இதற்காக கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழக அரசுக்கு ரூ.1 கோடி செலுத்தினால், ரூ.3 கோடி செலவில் தூர்வார வேண்டும்.
நீர் மேலாண்மை
 கீழ்பவானி பாசன நிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், வீட்டுமனைகள் மற்றும் பிற வணிக பயன்பாட்டிலுள்ள ஆயக்கட்டு நிலங்களை போர்கால அடிப்படையில் நீக்கம் செய்து மீதமாகும் தண்ணீரை ஆயக்கட்டு பகுதியில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.
 உள்ளிட்ட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 
இந்த கூட்டத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள், செயல்வீரர்கள் மற்றும் பாசன பகுதியில் உள்ள ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Next Story