தூத்துக்குடி கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்


தூத்துக்குடி கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 10 May 2022 5:20 PM IST (Updated: 10 May 2022 5:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வாலிபர் கோர்ட்டில் சரணடைந்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 42). கஞ்சா விற்பனை செய்ததாக இவர் மீது வழக்குகள் உள்ளன. இவர் ஜார்ஜ் ரோட்டில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மாடியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி, இசக்கிராஜா, அருண், மற்றொரு சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்த செல்வசதீஷ் (23) என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை தென்பாகம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story