மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,649 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதினர்


மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,649 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 6:45 PM GMT (Updated: 10 May 2022 12:14 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,649 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர்.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,649 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர். 

பிளஸ்-1 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 5,436 மாணவர்களும், 6,213 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 649 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர். 
இதில் 63 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 வரை நடந்தது. தேர்வில் முறைகேடுகள் ஏற்படாத வகையில் பறக்கும் படையினர் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

மின்சாரம்-குடிநீர்

அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லாத மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் தேர்வு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story