தூத்துக்குடியில் மூட்டா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் மூட்டா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 6:08 PM IST (Updated: 10 May 2022 6:08 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி மூட்டா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில், `மூட்டா' கிளை சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி வ.உ.சி. கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டம் நடந்தது. ,இந்த போராட்டத்துக்கு `மூட்டா' மண்டல செயலாளர் சிவஞானம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் நாகராஜன் போராட்டம் குறித்து விளக்கி பேசினார். டான்சாக் மண்டல செயற்குழு உறுப்பினர் சுந்தர பிரம்மநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் தேவமனோகரன் நன்றி கூறினார்.

Next Story