பவாயில் உள்ள விகார் ஏரியில் மூழ்கி சிறுவன் பலி


ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
x
ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
தினத்தந்தி 10 May 2022 7:06 PM IST (Updated: 10 May 2022 7:06 PM IST)
t-max-icont-min-icon

மும்பை பவாய் பகுதியில் செல்லும் விகார் ஏரியில் நேற்று முன்தினம் சிறுவன் ஒருவன் நீச்சல் அடித்து குளித்து கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென தண்ணீரில் மூழ்கினான்.

மும்பை, 
  மும்பை பவாய் பகுதியில் செல்லும் விகார் ஏரியில், நேற்று சிறுவன் ஒருவன் நீச்சல் அடித்து குளித்து கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென தண்ணீரில் மூழ்கினான். இதனை கண்ட அப்பகுதியினர், தண்ணீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர் தெரிவித்தனர்.
  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், நீரில் மூழ்கி பலியான சிறுவன் கவுதம் பஞ்சால் (வயது 15) என்பது தெரியவந்தது. தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. 
  சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியது.
-----

Next Story