திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது


திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது
x
தினத்தந்தி 10 May 2022 7:31 PM IST (Updated: 10 May 2022 7:31 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மொழிப்பாடத்தேர்வை 26 ஆயிரத்து 272 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 1,437 பேர் வரவில்லை.
பிளஸ்-1 மொழிப்பாட தேர்வு
பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. முதல்நாளான நேற்று மொழிப்பாட தேர்வு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 217 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 27 ஆயிரத்து 709 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். 91 மையங்களில் தேர்வு நடத்த தயார் செய்யப்பட்டு இருந்தது.
மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு தேர்வு அறைகள் தயார்படுத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதாத மாணவ-மாணவிகள் நேற்று முதன் முறையாக பிளஸ்-1 பொதுத்தேர்வை எதிர் கொண்டனர். இதனால் கொஞ்சம் பதற்றமாகவே காணப்பட்டனர். அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டு தேர்வறைக்கு சென்று தேர்வு எழுதினார்கள்.
1,437 பேர் தேர்வு எழுதவில்லை
தேர்வை கண்காணிக்கும் வகையில் 91 தலைமை ஆசிரியர்கள், 91 துறை அலுவலர்கள், 1,608 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். 157 பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தமிழ் தேர்வுக்கு 27 ஆயிரத்து 298 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 25 ஆயிரத்து 863 பேர் தேர்வு எழுதினார்கள். 1,435 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பிரெஞ்சு பாடத்துக்கு 408 பேர் விண்ணப்பித்து 406 பேர் தேர்வு எழுதினார்கள். 2 பேர் தேர்வு எழுதவில்லை. அரபி மொழியில் ஒருவர் விண்ணப்பித்து அவர் தேர்வு எழுதினார். அதுபோல் இந்தி மொழிப்பாட தேர்வை 2 பேர் விண்ணப்பித்து 2 பேரும் எழுதினார்கள். அதன்படி 26 ஆயிரத்து 272 பேர் மொழிப்பாடத்தேர்வை எழுதினார்கள். 1,437 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Next Story