திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா
திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரமும், நேற்று முன்தினம் இரவு சந்தன லேபன அலங்காரமும் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் முத்தாரம்மனுக்கு தீர்த்தம், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் காலை 11 மணியளவில் முத்தாரம்மன் கோவிலிலிருந்து உச்சினி மாகாளியம்மன் கோவிலுக்கும், வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு தட்டு பிரசாதம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் முத்தாரம்மனுக்கு அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்திய பின் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கொடை விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பல்வேறு வேடங்கள் அணிந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story