சின்னமனூர் அருகே செங்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
சின்னமனூர் அருகே செங்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
உத்தமபாளையம்:
சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் செங்குளம் கண்மாய் உள்ளது. இதன் நீர்நிலை பகுதியில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கண்மாய் இருந்த அடையாளமே தெரியாத அளவிற்கு தென்னந்தோப்பாக மாற்றி இருந்தனர்.
இதையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில் செங்குளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி நிலம் மீட்கப்பட்டது. மேலும் கண்மாயில் இருந்த 400 தென்னை மரங்கள், 105 புளிய மரங்களை பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக கைப்பற்றியது. மீட்கப்பட்ட நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் கரை அமைத்து வருகின்றனர். 40 ஆண்டு காலமாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.கவுசல்யா, தாசில்தார் அர்ச்சுனன், மார்க்கையன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திரவியம், துணை தாசில்தார் முருகன், சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story