வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு


வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 May 2022 9:08 PM IST (Updated: 10 May 2022 9:08 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்து உள்ளார்.

தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி அருகே வீரபாண்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா  இன்று தொடங்கி வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்   13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனால், தேனி மாவட்டத்துக்கு  13-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும். மேலும், இந்த உள்ளூர் விடுமுறை தினத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு வழக்கம்போல் நடக்கும். அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story