29707 மாணவ, மாணவிகள் பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 707 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 707 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர்.
பிளஸ்- 1 பொதுத் தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, நிதியுதவி பெறும் பள்ளி என 257 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 459 மாணவர்களும், 15 ஆயிரத்து 521 மாணவிகளும் என 30 ஆயிரத்து 980 பேர் பிளஸ்- 1 வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்து இருந்தனர். அதேபோல் தனித்தேர்வர்கள் 427 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தேர்விற்காக பள்ளித் தேர்வர்களுக்காக 113 தேர்வு மையங்களும், தனித் தேர்வர்களுக்காக 5 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வரவில்லை
இதில் 257 மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவிகளில் 174 பேருக்கு தேர்வில் சொல்வதை எழுத உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். தேர்விற்காக 121 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 127 துறை அலுவலர்களும், 179 நிலையான பறக்கும் படையினரும், 119 எழுத்தர் மற்றும் 119 அலுவலக உதவியாளர்கள் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 29 ஆயிரத்து 707 மாணவர்கள் தேர்வு எழுதினர். 1533 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
Related Tags :
Next Story