விற்பனையாளர்களுக்கு பயிற்சி


விற்பனையாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 10 May 2022 9:26 PM IST (Updated: 10 May 2022 9:26 PM IST)
t-max-icont-min-icon

விற்பனையாளர்களுக்கு பயிற்சி

பல்லடம் அருகே, அருள்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் துவக்கி வைத்து பேசியதாவது:- தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது.எனவே கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், உரிய நேரத்தில், ரேஷன் கடைகளை திறந்து, அன்றாட இருப்பு விவரத்தை தெளிவாக அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும். பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும் போது தொழில்நுட்ப இடர்பாடுகள் ஏற்படும் நேரத்தில், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி உரிய பதிவேட்டில் குடும்ப அட்டைதாரர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும். பொதுமக்களை எந்த காரணம் கொண்டும் திருப்பி அனுப்பி அலைக்கழிக்க கூடாது. பொதுமக்களிடம், மரியாதையாகவும் கனிவாகவும் நடந்து கொள்ளவேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், கூட்டுறவு சார் துணை பதிவாளர்கள், பிரபாவதி, சுரேஷ்குமார், மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story