ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 9:57 PM IST (Updated: 10 May 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வேதாரண்யம், தேவூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வேதாரண்யம், தேவூரில்  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பழைய ஓயவூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி வேதாரண்யம் வட்டார கல்வி  அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திறகு ஆசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் இளங்கோவன் வரவேற்றார். ஆசிரியர்கள் ஜெகநாதன், மணிமேகலை, செந்தமிழ்ச்செல்வி எழில்மாறன் ஆகியோர் பேசினர். 
 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ஆசிரியை ஜெயன் நன்றி கூறினார்.
தேவூர்
இதேபோல  கீழ்வேளூர் அருகே தேவூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். 
இதில் வட்டார துணை தலைவர் நரேஷ் குமார், வட்டார பொருளாளர் கன்னியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள்  எழுப்பினர்.

Next Story