‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 May 2022 7:00 PM GMT (Updated: 2022-05-10T22:24:13+05:30)

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதார சீர்கேடு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கடைவீதியில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல்மேடு கடைவீதியில் கழிவுநீர், மழைீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்து, மணல்மேடு.

Next Story