வீட்டு சுவரை இடித்ததால் மயங்கி விழுந்த மூதாட்டி சாவு


வீட்டு சுவரை இடித்ததால் மயங்கி விழுந்த மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 10 May 2022 10:27 PM IST (Updated: 10 May 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

லத்தேரி அருகே வீட்டு சுவரை இடித்ததால் மயங்கி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

கே.வி.குப்பம்

லத்தேரி அடுத்த பனமடங்கி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி அசோக்குமாரி (வயது 75). கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வந்தார். இவருடைய 4 மகன்கள் பெங்களூருவில் உள்ளனர். இவர் வீட்டின் பக்கத்தில் உள்ள பழைய சுவர் ஒன்றை வெங்கடேசனின் தம்பி உமாபதியின் மகன் முரளி, முரளியின் மைத்துனர் சீனிவாசன் ஆகியோர் வீடுகட்டுவதற்காக இடித்துள்ளனர். இதற்கு அசோக்குமாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஒருகல் அசோக்குமாரி கால் மீது விழுந்து காயம் ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பனமடங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார்.

Next Story