கர்நாடக மந்திரிசபை கூட்டம் 2-வது முறையாக ஒத்திவைப்பு
கர்நாடக மந்திரிசபை கூட்டம் 2-வது முறையாக ஒத்திவைக்கப்படுகிறது
பெங்களூரு: உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 3-ந் தேதி பெங்களூரு வந்தார். அவருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபை மாற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார். அவர் டெல்லி சென்று ஆலோசனை நடத்திய பிறகு இதுபற்றி தகவல் தெரிவிப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் இதுவரை எந்த தகவலும் பா.ஜனதா மேலிடத்திடம் இருந்து வரவில்லை. இதற்கிடையே கடந்த 5-ந் தேதி மந்திரிசபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
10-ந் தேதிக்குள் மந்திரிசபை மாற்றம் ஏற்படும் என்று கருதி மந்திரிசபை கூட்டம் 11-ந் தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எதிர்பார்த்தப்படி மந்திரிசபை மாற்றத்திற்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கவில்லை. அதனால் இன்று(புதன்கிழமை) நடைபெற இருந்த மந்திரிசபை கூட்டம் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story