வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் 90 சதவீதம் நிறைவு


வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் 90 சதவீதம் நிறைவு
x
தினத்தந்தி 10 May 2022 10:37 PM IST (Updated: 10 May 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

வேலூர்

வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

புதிய பஸ் நிலையம்

வேலூர் மாநகரின் வளர்ச்சி காரணமாக புதிய பஸ்நிலையம் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சித்தூர் மற்றும் பிற மாவட்டங்களுக்கு வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.52 கோடி மதிப்பீட்டில் வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்கப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இங்கு வணிக வளாகம், கழிவறை வசதி, குளியலறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இருபுறமும் நுழைவு வாயில்கள் அமைக்கப்படுகிறது.

84 பஸ்கள் நிறுத்தும் வகையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் அனைத்தும் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மின்விளக்கு பொருத்துதல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

அடுத்த மாதம் திறப்பு

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் முடிவடைய உள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து விடும். அடுத்த மாதம் புதிய பஸ் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான திறக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

Next Story