ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி


ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 10 May 2022 10:46 PM IST (Updated: 10 May 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

மேல் ஆலத்தூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

குடியாத்தம்

குடியாத்தம் அருகே மேல்ஆலத்தூர் பகுதியில்  7 ஆண்டுகளுக்கு முன்பு ெரயில்வே கீழ் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக குடியாத்தம் நகருக்கு  மேல்ஆலத்தூர், கூடநகரம், அணங்காநல்லூர், பட்டு, கொத்தகுப்பம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மேல்ஆலத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை பெய்தது. அதனால் ெரயில்வே பாலத்திற்கு கீழ் சுமார் 3 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

அதனால் இந்த பாலத்தின் வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். வாகனங்களில் தண்ணீர் புகுந்துவிட்டதால் மிகவும் சிரமப்பட்டு பாலத்தை கடந்து சென்றனர். பலர் அந்த வழியாக செல்லாமல் வேறு வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்றனர். 

இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் வெளியேற்றினாலம் மீண்டும் ஊற்றுக்களில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story