விராலிமலை, மணமேல்குடி அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்


விராலிமலை, மணமேல்குடி  அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 10 May 2022 10:48 PM IST (Updated: 10 May 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

விராலிமலை, மணமேல்குடி அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விராலிமலை:
சித்திரை திருவிழா
விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பூச்சொரிதல் விழாவானது கடந்த 26-ந் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து  அம்மனுக்கு காப்புகட்டி திருவிழா தொடங்கியது. அன்று முதல் காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று அம்மன் வீதி உலா நடைபெற்றது. 
பக்தர்கள் நேர்த்திக்கடன் 
இதையடுத்து இன்று காலையில் பக்தர்கள் சத்குரு சம்ஹாரமூர்த்தி கோவிலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
மணமேல்குடி
மணமேல்குடி அருகே காரக்கோட்டை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காப்புகட்டிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், காவடி, கரும்பு தொட்டி எடுத்தல், பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை காரக்கோட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.

Next Story