31,678 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர்


31,678 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 10:54 PM IST (Updated: 10 May 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 31 ஆயிரத்து 678 மாணவ-மாணவிகள் எழுதினர்.

கடலூர்

தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த  5-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6-ந்தேதியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பிளஸ்-1 தேர்வு தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்காக 245 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 416 மாணவர்கள், 16 ஆயிரத்து 175 மாணவிகள் என 32 ஆயிரத்து 591 மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக 121 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர 7 தேர்வு மையங்களில் 223 தனித்தேர்வர்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 814 பேர் தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

31,678 மாணவர்கள் எழுதினர்

தொடர்ந்து காலை 10.15 மணிக்கு தேர்வு என்றாலும் மாணவ-மாணவிகள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வந்தனர். கடலூர் உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்தது. இந்த மழையில் குடைபிடித்தபடி மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றனர். தொடர்ந்து 9.45 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் அனைத்து மாணவர்களும் சென்றனர். பின்னர் குறிப்பிட்ட மணி அடித்ததும் காலை 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்கினர். இந்த தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்வை 31 ஆயிரத்து 678 மாணவ-மாணவிகள் எழுதினர். 1136 பேர் தேர்வு எழுத வரவில்லை. முன்னதாக தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

ஆய்வு

தேர்வு மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இது தவிர பறக்கும் படையினர், நிலைப்படை அலுவலர்களும் தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதுகிறார்களா? என்பதை கண்காணித்தனர்.

Next Story