மூதாட்டியிடம் 7 பவுன் தாலி சங்கிலி திருட்டு
மூதாட்டியிடம் 7 பவுன் தாலி சங்கிலி திருட்டு போனது
வடகாடு:
வடகாடு அருகே கீரமங்கலம் ஆலடிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 65). இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விட்டு தனது கணவருடன் அரசு பஸ்சில் ஏறி புளிச்சங்காடு கைகாட்டியில் வந்து இறங்கினார். பின்னர் மதுரை செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்த போது ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலி திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story