கியாஸ் சிலிண்டரை தூக்கில் தொங்க விட்டு நூதன ஆர்ப்பாட்டம்


கியாஸ் சிலிண்டரை தூக்கில் தொங்க விட்டு நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 11:10 PM IST (Updated: 10 May 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கியாஸ் சிலிண்டரை தூக்கில் தொங்க விட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி: 

தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பழனியில் வேல் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் சிந்து கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் இனியவன், பொருளாளர் அங்கமுத்து, பழனி சங்க தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில், விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டரை கயிற்றால் கட்டி தூக்கில் தொங்க விட்டு நூதனமுறையில் சமையல் கலை தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும், கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். சமையல் சங்க தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ேகாஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட சமையல் கலை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Next Story