மாவட்ட செய்திகள்

போச்சம்பள்ளி அருகேடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சிமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Tasmac Store

போச்சம்பள்ளி அருகேடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சிமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

போச்சம்பள்ளி அருகேடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சிமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
போச்சம்பள்ளி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை 
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக ஞானசேகரன் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல கடைக்கு வந்தார்.
அப்போது கடையின் முன்புற ஷட்டரில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பாரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மதுபாட்டில்கள் தப்பின 
அப்போது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக அங்கு வந்ததும், டாஸ்மாக் கடையின் ஷட்டரில் இருந்த 3 பூட்டுகளை வெல்டிங் மெஷின் வைத்து உடைத்தும் உள்ளனர். பின்னர் அவர்கள் ஷட்டரை உடைக்க முயன்றும் முடியாததால் அப்படியே விட்டு சென்றதும் தெரிய வந்தது.
டாஸ்மாக் கடையில் ஷட்டரை உடைக்க முடியாததால் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தப்பின. இது தொடர்பாக பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்
டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தேசிய மாதர் சம்மேளன மாநில செயலர் வலியுறுத்தி உள்ளது.
2. கோவில் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கூடாது
இருக்கன்குடியில் கோவில் அருகே டாஸ்மாக்கடை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
3. டாஸ்மாக் கடையில் செல்போன் திருடிய 2 பேர் கைது
டாஸ்மாக் கடையில் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
4. டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டு மாற்ற முயற்சி; ரியல் எஸ்டேட் தரகர் உள்பட 2 பேர் கைது
டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற ரியல் எஸ்டேட் தரகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் ஊற்றி மதுபாட்டில்கள் எரிப்பு- 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் ஊற்றி மது பாட்டில்களை எரித்ததாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.