மாவட்ட செய்திகள்

அஞ்செட்டி அருகேபுதுப்பெண்ணை கடத்திய காதலன் கைது + "||" + Arrested

அஞ்செட்டி அருகேபுதுப்பெண்ணை கடத்திய காதலன் கைது

அஞ்செட்டி அருகேபுதுப்பெண்ணை கடத்திய காதலன் கைது
அஞ்செட்டி அருகே புதுப்பெண்ணை கடத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே புதுப்பெண்ணை கடத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுப்பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டியை சேர்ந்தவர் வேலு. தொழிலாளியான இவருக்கும், பி.ராசிபுரம் கிராமத்தை சேர்ந்த மாதையன் மகள் புவனேஸ்வரி (வயது 21) என்பவருக்கும் கடந்த 4-ந் தேதி திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரிக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என தெரிகிறது. 
இந்த நிலையில் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த புதுப்பெண் புவனேஸ்வரி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை. இதுகுறித்து அவரது தாயார் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். 
காதலன் கைது
அப்போது புவனேஸ்வரியும், பைல்காடு கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (22) என்பவரும் எற்கனவே காதலித்து வந்ததும், காதலன் தேவராஜ் திருமணம் செய்யும் நோக்கில் புதுப்பெண்ணை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண்ணை கடத்திய காதலன் தேவராஜை கைது செய்தனர். மேலும் புவனேஸ்வரியை மீட்டு அவரது கணவர் மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நகை, செல்போன்களை பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் கைது
மோட்டார் சைக்கிளில் வந்து நகை, செல்போன்களை பறித்த ஒருவன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
2. திருச்சி மாநகரில் கடந்த 4 மாதங்களில் கஞ்சா, போதை ஊசி விற்பனை செய்ததாக 369 பேர் கைது
திருச்சி மாநகரில் கடந்த 4 மாதங்களில் கஞ்சா, போதை ஊசி விற்பனை செய்ததாக 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
3. கரூரில், மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
கரூரில், மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
4. அனுமதியின்றி மணல் அள்ளிவந்தவர் கைது
அனுமதியின்றி மணல் அள்ளிவந்தவர் கைது செய்யப்பட்டார்.
5. மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது
டி.கல்லுப்பட்டி பகுதியில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.