திருச்செங்கோட்டில் உதவி விதை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி
திருச்செங்கோட்டில் உதவி விதை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் சார்பில் திருச்செங்கோட்டில் அனைத்து வட்டார உதவி விதை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) ராஜகோபால் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி, திருச்செங்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நாமக்கல் விதைச்சான்று அலுவலர் ஹேமலதா விதைப்பு அறிக்கை பதிவு செய்வது, விதைப்பண்ணை அமைப்பது, வயலாய்வு பணி, சுத்தி அறிக்கை வழங்கல், சுத்தி பணி, மாதிரிகள் சேகரிப்பு, விதை ஆய்வு மற்றும் சான்றட்டைகள் பொருத்துதல் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
மேலும் தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றியும், சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார். திருச்செங்கோடு விதைச்சான்று அலுவலர் தமிழரசு புதிதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பயிர் ரகங்கள் பற்றியும், அதன் சிறப்பியல்புகள் குறித்தும் பேசினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருச்செங்கோடு வட்டார உதவி அலுவலர்கள் சிவக்குமார் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story