மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் 3 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து + "||" + license cancel

நாமக்கல்லில் 3 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

நாமக்கல்லில் 3 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
நாமக்கல்லில் 3 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
நாமக்கல்:
இருசக்கர வாகனங்களில் 3 நபர்கள் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மற்றும் சுங்கச்சாவடியில் கடந்த 2 நாட்களாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது செல்போன் பேசியபடி இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்தல், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தல் போன்ற விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டு, 41 பேருக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த கனரக வாகனங்களில் இருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன. இந்த சோதனையின் போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சரவணன், சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.