பரமத்திவேலூரில் ரூ.2¼ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.2¼ லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 8 ஆயிரத்து 428 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.20-க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 406-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு 8 ஆயிரத்து 742 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.26.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.20-க்கும், சராசரியாக ரூ.25.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 348-க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்தனர்.
Related Tags :
Next Story