மாரண்டஅள்ளி அருகே சூறைக்காற்றால் வீடுகளை இழந்து தவிக்கும் இருளர் இன மக்கள்


மாரண்டஅள்ளி அருகே  சூறைக்காற்றால் வீடுகளை இழந்து தவிக்கும் இருளர் இன மக்கள்
x
தினத்தந்தி 10 May 2022 5:53 PM GMT (Updated: 10 May 2022 5:53 PM GMT)

மாரண்டஅள்ளி அருகே சூறைக்காற்றால் வீடுகளை இழந்து தவிக்கும் இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே சூறைக்காற்றால் வீடுகளை இழந்து தவிக்கும் இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இருளர் இன மக்கள்
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சாமனூர் ஊராட்சி இந்திரா நகரில், 50-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ரேஷன் கார்டு, சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, வீடு இல்லாமல்  புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்த வருகின்றனர். அப்பகுதியில் ஒரு சிலருக்கு மட்டும் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 
ஆனால் மீதமுள்ளவர்கள் வீடுகள் இல்லாமல் மண் வீடு கட்டி மேற்கூரைக்கு பிளாஸ்டிக் அட்டைகள் போர்த்தி, சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருளில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மண் வீட்டின் மேல் போர்த்தி இருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்து சேதமானது.
கோரிக்கை
இதனால் இருளர் இன மக்கள் இரவு முழுவதும் குழந்தைகளுடன் இருளிலும், மழையிலும் தவித்தனர். அடிப்படை வசதிகள் இன்றி வீடுகளை இழந்து தவிக்கும் இருளர் இன மக்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story