மாவட்ட செய்திகள்

பள்ளிபாளையத்தில் திராவிடர் விடுதலை கழக மாநாடு + "||" + meeting

பள்ளிபாளையத்தில் திராவிடர் விடுதலை கழக மாநாடு

பள்ளிபாளையத்தில் திராவிடர் விடுதலை கழக மாநாடு
பள்ளிபாளையத்தில் திராவிடர் விடுதலை கழக மாநாடு நடந்தது.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நேரு திடலில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ‘திராவிட மாடல் மண்டல மாநாடு’ நடந்தது. நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் முத்துபாண்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டு திராவிட மாடல் குறித்த சிறப்புகளை எடுத்துரைத்து பேசினர். இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் சரவணன், நகர செயலாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.