போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 6:08 PM GMT (Updated: 2022-05-10T23:38:55+05:30)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை புறவெளிச்சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனி, வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நாளையே பேசி போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர் என அறிவிக்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 78 மாத அகவிலைப்படி உயர்வையும், மருத்துவகாப்பீட்டையும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

இதில் மண்டல செயலாளர் மனோகரன், பொருளாளர் கணபதி, துணைசெயலாளர்கள் ரவி, மூர்த்தி, ஜானகிராமன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் என நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல தலைவர் மதியழகன் நன்றி கூறினார்.

Next Story