தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர்
திருவாரூரில் தமிழக அரசின் ஒராண்டு சாதனை மலரை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டார்.
திருவாரூர்;
திருவாரூரில் தமிழக அரசின் ஒராண்டு சாதனை மலரை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டார்.
சாதனை மலர்
தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் ஓராண்டு ஆட்சி ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி, நிறைவான வளர்ச்சியில், நிலையான பயணம் என்ற தலைப்பிலான சாதனை மலரை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டார். மலரை மாவட்டவருவாய் அலுவலர் சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
தமிழக அரசு திட்டங்கள்
பின்னர் கலெக்டர் காயத்திரிகிருஷ்ணன் கூறியதாவது
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் திருவாரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் முகவரி திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டம், கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், ஆவின் பால் விலை குறைப்பு திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
14 வகையான மளிகை பொருட்கள்
மேலும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம், முன் களப்பணியாளர்களுக்கு நிவாரண நிதியுதவி, பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு திட்டம், நமக்கு நாமே திட்டம், கோவில் பணியாளர்களுக்கு மாத ஊக்க தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஓராண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சாதனை மலர் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் செய்திமக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோடி, துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புதிட்டம்) கண்மதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story