பிளஸ்-1 பொதுத்தேர்வை 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்


பிளஸ்-1 பொதுத்தேர்வை 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 6:11 PM GMT (Updated: 2022-05-10T23:41:55+05:30)

நாகை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

வெளிப்பாளையம்:
தமிழகம் முழுவதும் பிளஸ் - 1 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 869 மாணவர்களும், 4 ஆயிரத்து 131 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். 304 மாணவர்களும், 157 மாணவிகளும் என மொத்தம் 461 பேர் தேர்வு எழுதவில்லை. மாவட்டத்தில் 94.52 சதவீத மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.

Next Story