மாவட்ட செய்திகள்

பெரியார் நினைவு சமத்துவபுர கட்டுமான பணிகள்; ஊராட்சித்துறை இயக்குனர், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு + "||" + Construction work of Periyar Memorial Samathuwapura

பெரியார் நினைவு சமத்துவபுர கட்டுமான பணிகள்; ஊராட்சித்துறை இயக்குனர், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

பெரியார் நினைவு சமத்துவபுர கட்டுமான பணிகள்; ஊராட்சித்துறை இயக்குனர், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
பெரியார் நினைவு சமத்துவபுர கட்டுமான பணிகளை ஊராட்சித்துறை இயக்குனர், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிங்கம்புணரி,
பெரியார் நினைவு சமத்துவபுர கட்டுமான பணிகளை ஊராட்சித்துறை இயக்குனர், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சமத்துவபுரம்
சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஊராட்சித்துறை இயக்குனர் பிரவீன் நாயர், கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
பின்னர் அவர்கள் கூறும்போது,  சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணமங்கலம்பட்டி ஊராட்சியில் உள்ள கோட்டைவேங்கைப்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் புதிதாக 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, விளையாட்டுத்திடல் போன்ற அடிப்படை வசதிகளுடன் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 
காய்கறி தோட்டம்
புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பயனாளிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் வழங்கப்பட உள்ளன. இங்கு முதியவர் மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், அங்கன்வாடி மையங்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக பொதுவினியோக கடை, விளையாட்டுத்திடல், வீடுதோறும் காய்கறி தோட்டங்கள் அமைத்தல், மரக்கன்றுகளை வளர்த்தல் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சிவரஞ்சனி, சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி, சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, கண்ணமங்கலம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செம்மலர் சந்திரன் உடனிருந்தனர்.