கல்வி விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்கள்


கல்வி விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்கள்
x
தினத்தந்தி 10 May 2022 6:16 PM GMT (Updated: 2022-05-10T23:46:48+05:30)

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30-ந் தேதி கடைசிநாளாகும்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மை பணியாளர் பணியிடங்கள் (ஆண்-12, பெண்-7) நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 1.7.22 அன்றைய தேதியின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 18 முதல் 35 வயதுக்குள்ளும், பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினர் 18 முதல் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 18 முதல் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

அதனால் தகுதியுடைய நபர்கள் www.cuddalore.nic.inஎன்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களை அறிந்து, விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2-ஐ ஒட்டி, அதனை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி செய்ய வேண்டும். மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story